கொழும்பில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

கொழும்பில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான சட்டவிரோத கட்டிடங்ககளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களே வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிர்மாணங்களால் நீரின் ஓட்டம் தடைபட்டுள்ளதுடன், கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோத கட்டுமானங்கள் என்பதோடு அவை பேரவாவி, மருதானை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களைச் சுற்றி அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் சில கட்டிட உரிமையாளர்களுடன் ஒரு சுமூக தீர்வுக்கு வர முடியுமா என்பதைப் பார்க்க நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த உரிமையாளர்களின் கட்டிடங்களை இடிப்பதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை, ஆனால் எங்கள் பொறியியலாளர்களின் உதவியுடன் மாற்று தீர்வுகளை வழங்குவோம். அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடலை நடத்தவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்,” என அவர் கூறியுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் அதில் வசிக்க விரும்பவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles