42,000 பேரை உடனடியாக கைது செய்க, OIC’களுக்கு பறந்த உத்தரவு

நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,000 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளதாக தமிழன் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலுக்கு அமைய, சந்தேகநபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேகநபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 பேர் (2022ஆம் ஆண்டு) மற்றும் 1,678 (2023ஆம் ஆண்டு) சந்தேகநபர்கள் 2,485 பேர் ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (13) பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த மூன்று 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது பொலிஸ் நிலையத்தை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Latest articles

Similar articles