ஜனவரி 12 நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 12ஆம் திகதி அமர்வுடன் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்ககவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளன.

தொடர்ந்தும் நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், குறுகிய காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தவார இறுதியில் இரு வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்க உள்ளதுடன், நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதான கட்சிகளின் அரசியல் மேடைகளில் பேசப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில், எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றவுள்ள இவ்வருடத்திற்கான கன்னி அமர்வுகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார்.

அனைத்துலக பொருளாதார மாநாடு மற்றும் அணிசேரா நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தவார இறுதியில் சுவிட்ஸர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.

இந்த நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவர் என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

Similar articles