மின்சார சபை வேலைநிறுத்தம்; அமைச்சர் எச்சரிக்கை

சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து, உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணை திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

Similar articles