124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

சுகாதார அமைச்சின் வைத்திய விநியோகப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 55 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, 40 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில மீளப் பெறப்பட்டதோடு, சில மருந்துகள் பாவனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மொத்தம் 35 Flucloxacillin Cap தொகுதிகள் மீளப்பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மருந்து இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுக்கு அமைய, 2017ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 600 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் 96 வழக்குகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

இதேவேளை 2019 ஆம் ஆண்டில் தரமற்ற மருந்துகள் தொடர்பில் 96 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 2023 இல் ஆம் ஆண்டில் மருந்துகளின் தரம் தொடர்பில் பல சர்ச்சைகள் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதுடன் அது சுகாதார அமைச்சுப்பதவி மாற்றத்திற்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles