களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை காற்சட்டைக்குள் மறைத்து வைத்து கொண்டு சென்ற பெண் ஒருவரை சிறைச்சாலை அதிகாரிகள், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவை – மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக காற்சட்டை ஒன்றை கொண்டு வந்ததாகவும், அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் சோதனை செய்தபோது அந்தக் காற்சட்டையின் ஓரத்தில் 440 மில்லிகிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (virakesari.lk)
