வரி அடையாள எண்ணை (TIN number) பெறுவதால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரிவிதிப்பிற்குட்பட மாட்டார்கள் எனவும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும் கட்டாயம் உள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடப்புக் கணக்கைத் திறக்கும்போதும், கட்டிடத் திட்ட அனுமதியைக் கோரும்போதும், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும்போதும், அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும்போதும் மற்றும் நில உரிமையைப் பதிவு செய்யும்போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
