2024இன் முதல் கட்சி தாவல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்து கொண்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டின் முதல் கட்சித்தாவல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கட்சியில் இணைந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று (ஜனவரி 01) காலை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை மற்றும் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

Latest articles

Similar articles