குறைந்த சராசரி சம்பளம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு இறுதி இடம்

CEOWORLD இதழ் உலகளவில் சராசரி மாத நிகர சம்பளம் குறித்த, (வரிக்குப் பின்னர்) சில பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளில் உள்ள வருமானங்களின் ஒப்பீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

105 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியில் இறுதி இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பிரஜை ஒருவரின் மாதாந்த சராசரி சம்பளம் 143.62 அமெரிக்க டொலர்களாகும்.

முதலிடத்தில் உள்ள சுவிட்ஸர்லாந்து பிரஜை ஒருவரின் மாதாந்த சம்பளம் 6142.1 அமெரிக்க டொலர்களாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு முழுநேர ஊழியரின் சராசரி மொத்த மாத ஊதியம் 3,663 அமெரிக்க டொலர்களாகும்.

முழு விபரம்:

https://ceoworld.biz/2023/08/25/countries-with-the-highest-and-lowest-average-salaries-2023/

Latest articles

Similar articles