சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
“கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் என்பவற்றை சட்டங்கள், கொடூர வன்முறை மூலமாக அரசு பறித்து வருகிறது. இந்த செயற்பாடுகளினதும் சிங்கள பௌத்த பெரும்பான்மை வாதத்தினதும் ஒரு வடிவமே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வன்முறை” என அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடக அறிக்கை👇

