நாடளாவிய ரீதியல் மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையான யுக்திய சுற்றிவளைப்பு ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.
குறித்த காலப்பகுதிக்குள் 56,541 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 49,558 சந்தேகநபர்களும், குற்றப்பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6,983 சந்தேகநபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இந்த சுற்றிவளைப்புகளின் போது 142 கிலோ 541 கிராம் ஹெரோயின், 208 கிலோ 290 கிராம் ஐஸ், 974 கிலோ 605 கிராம் கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருட்கள் பாதுகாப்பு தரப்பினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 1,817 பேர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 1,981 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். (newsfirst with some inputs)
