கெஹலியவிற்கு வீட்டிலிருந்து உணவு: நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுதி

கெஹலிய ரம்புக்​வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாகவும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 3ஆம் திகதி முதல் இவரது இராஜினாமா நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி B.திசாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு கோரிக்கை விடுக்கவில்லை என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமுமாகிய காமினி B.திசாநாயக்கவிடம் வினவிய போதே இதனை குறிப்பிட்டதாக நியுஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு புதன்கிழைமை (7) ஆரம்பிக்கும் நிலையில், அதில் பங்குபற்றுவதற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

ரம்புக்வெலவை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு அவரது செயலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையையடுத்து சபாநாயகர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்லவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles