நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் பராமரிக்க போதிய வருமானம் இல்லாமையால் தன்னுடைய மனைவியை தான் வெளிநாட்டுக்கு அனுப்பியதாக பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதா நெருக்கடியால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கக்கோரி பொகவந்தலாவை – செல்வகந்தை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அடிக்காதே அடிக்காதே தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே”, “போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து
கொண்டனர்.
