சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள் விரைவில் இலங்கை திரும்புவர்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, சீஷெல்ஸ் பாதுகாப்புப் படையின் உதவியுடன் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவர, இந்திய கடற்படை ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 27 ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்கள் இலங்கை கொடியுடன் பயணித்த பலநாள் மீன்பிடி இழுவைப்படகை கடத்திச் சென்றனர்.

சோமாலியாவின் மொகடிஷுவிலிருந்து கிழக்கே 955 கடல்மைல் தொலைவில் இந்த கடத்தல் சம்பவம் பதிவாகியிருந்தது.

இலங்கை மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டதையடுத்து ஒருங்கிணைந்த பலதரப்பு நடவடிக்கையாக இந்திய கடற்படையினர் சீஷெல்ஸ் பாதுகாப்புப் படையினர் மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடத்தப்பட்ட கப்பலை வெற்றிகரமாக தடுத்து மீட்க உதவியது.

இந்திய கடற்படையின் சாரதா கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை கண்டுபிடித்து இடைமறிக்க ஹேல் சீ கார்டியனுக்கு பணித்தது.

புதுடில்லியில் உள்ள இலங்கை மற்றும் சீஷெல்ஸ் சர்வதேச தொடர்பு அதிகாரிகள் மூலம் திறமையான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றின் விளைவாக கடந்த 29ஆம் திகதி அன்று கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலை சீஷெல்ஸின் SCGS Topaz என்ற கப்பல் தடுத்து நிறுத்தியது.

இதையடுத்து, மூன்று கடற்கொள்ளையர்களும் சீஷெல்ஸ் கடலோர காவல்படையிடம் சரணடைந்தனர், மேலும் ஆறு இலங்கை மீனவர்களும் தற்போது பாதுகாப்பாக உள்ள நிலையில், அவர்களை சீஷெல்ஸின் கப்பல் மாஹேவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

Latest articles

Similar articles