உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தாக்குதல்தாரிகள் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமானவர்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதக் குழு தேசிய மக்கள் சக்திக்கு (NPP) நெருக்கமானவர்கள் எள்பதோடு அவர்கள் மார்க்சிஸ்டுகளுக்கு நிதியுதவி செய்தனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கூறியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய சந்தேகநபரான இப்ராஹிம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்தார். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் தந்தையும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்தார். இந்த குழு மில்லியன் கணக்கான ரூபாய்களை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளது. இந்த நாட்டில் உள்ள கத்தோலிக்கர்கள் வாக்களிக்கும் போது இந்த உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.” என லன்சா புதிய கூட்டணியின் ஆரம்பப் பேரணியின் போது கூறியுள்ளார்.

“தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ஒரு சதவீதம் கூட வரி செலுத்தவில்லை. எங்களைப் போல் ஒரு இளைஞருக்குக்கூட அவர்கள் வேலை வழங்கவில்லை. இதற்குக் காரணம், அவர்களிடம் எந்த நிறுவனமும் இல்லை. அவர்கள் வேலையில் இல்லை. இருப்பினும், அவர்கள் எங்களில் எவரையும் விட வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.” என அவர் கூறியுள்ளார்.

Latest articles

Similar articles