மாவனல்லை நகரில் அமைந்துள்ள வர்த்தக தொகுதியில் நேற்று (28) இரவு தீ பரவியுள்ளது.
சுமார் 30 கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மாவனல்லை நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வர்த்தகத் தொகுதியில் தீ பரவியுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் தீ நீடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனல்லை பிரதேச சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
