வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கிளிநொச்சியில் தமிழ் தாய்மார் ஆரம்பித்த போராட்டம் 7 வருடங்களை எட்டியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு (Volker Türk) ஆறு அம்சங்களை உள்ளடக்கிய
கோரிக்கை கடிதத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.
240ற்கும் மேற்பட்டோர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமலே உயிரிழந்துள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று கிளிநொச்சி நகரில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
2,257ஆவது நாளாகவும் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக தாம் போராட்டத்தை முன்னெடுத்து வருவதோடு, 37ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு முதல் தொடரும் அனைத்து அமர்வுகளிலும் நேரடியாக பிரசன்னமாகி நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கீழே

