முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிச் சடங்கில் உணவு சமைக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக தி சண்டே மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கில் இலங்கை இராணுவம் உணவு வழங்கியதா? என சமூக ஊடகங்கள் ஊடாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
எவ்வாறாயினும், இராணுவம் உணவுகளை சபை்பதற்காக மாத்திரமே அனுப்பப்பட்டதாகவும், மூலப்பொருட்களை வழங்கவில்லை எனவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
“இது தவறான தகவல். நாங்கள் உணவுகளை சமைத்தோம். உணவு தயாரிக்க அவர்களுக்கு எங்கள் உதவி தேவைப்பட்டது. தேவையான மூலப்பொருட்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற உறவினர்களால் வழங்கப்பட்டிருக்கலாம்.”
இது இராணுவத்தினரால் பின்பற்றப்படும் சாதாரண நடைமுறையா என வினவிய கேள்விக்கு பதிலளித்த இராணுவ ஊடகப் பேச்சாளர், கோரப்பட்டால், இராணுவத் தளபதிக்கு அவ்வாறான சேவைகளை வழங்குவதற்கான விருப்புரிமை இருப்பதாகத் தெரிவித்தார். “பேரழிவுகளின் போது கூட, நாங்கள் இந்த சேவைகளை வழங்குகிறோம்.”
சேவையை வழங்கும் போது இராணுவத்திற்கு ஏற்படும் செலவுகள் குறித்து வினவிய போது, ஏற்கனவே புத்தளத்தில் கடமையாற்றிய அதே படைப்பிரிவைச் சேர்ந்த சமையல்காரர்கள் இறுதிச் சடங்கில் சேவைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
