தமிழ் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
“பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் முன்வர வேண்டும். எமக்கான தீர்வு கிடைத்தால் தான் ஒன்றிணைந்து செயற்பட முடியும். தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றமடையும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.”
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரையில் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
