“காணி உரிமை வழங்கினால் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்களாம்!”

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்பினை வெளியிடுவதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய, நேற்று முன்தினம் (09) உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதை எதிர்க்கின்றோம் என பெருந்தோட்ட நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. காணி உரிமை வழங்கினால் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள் எனவும் கூறின. இப்படியான தரப்புகளை வைத்துக்கொண்டு நாட்டை எப்படி முன்னேற்றுவது?”

காணி உரிமை சம்பந்தமாக பிரதமர் செயலகத்தில் இன்று (09) சந்திப்பொன்று நடைபெற்றதாகவும், இதன்போதே பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் பங்கேற்ற தரப்பினர் இந்த கருத்தை முன்வைத்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது நாடாளுமன்ற உரையில் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் 40 ஆயிரம் ஹெக்டேயர் தரிசு நிலங்களாக காணப்படுவதாகவும், பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அதில் 10 வீதத்தை வழங்கினாலே போதுமானது எனவும் தான் இந்த கூட்டத்தில் சுட்டிக்காடட்டியாதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

Latest articles

Similar articles