200 மில்லியன் பெறுமதியான 2 சொகுசு வாகனங்களை கைப்பற்ற உத்தரவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து இடம்பெற்ற ஊழல் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக தெரியவந்துள்ளது.

சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களை அரசுடமையாக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக கைப்பற்றி அரசுடைமையாக்குமாறே உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான், இன்று (06) இந்த உத்தரவை இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக் குழுவுக்கு பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இரண்டு சாதாரண கார்களாக அவற்றைப் பதிவு செய்து , சொகுசு வாகன இறக்குமதிக்காக அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி இவற்றுக்குச் செலுத்தப்படாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். (virakesari)

Latest articles

Similar articles