சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சரவை கூட்டத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles