18 சதம் பணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது: காலியில் நிகழ்ந்த சம்பவம்

காலி, கல்வடுகொடை (Galvadugoda) பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் மின்கட்டணத்தில் வெறும் 18 சதம் பணம் செலுத்தாமையால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

காலி நகரத்திற்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கும் வரையறுக்கப்பட்ட லங்கா எலெக்ட்ரிசிட்டி தனியார் நிறுவனம் (LECO) தனது வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்துள்ளதாக குடியிருப்பாளர் விசும் மாபாலகம தெரிவித்துள்ளார்.

6650.18 ரூபாயாக இருந்த தனது மின்சாரக் கட்டணத்தைத் செலுத்துவதற்காக லெகோ அலுவலகத்திற்குச் சென்றதை மாபலகம விபரித்துள்ளார்.

18 சதம் பற்றி அவர் காசாளரிடம் விசாரித்துள்ளார். அவர் இவ்வளவு சிறிய தொகைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாது என உறுதியளித்துள்ளார். இதனையடுத்து மாபாலகம 6650.00 ரூபாயை செலுத்தியுள்ளார். எனினும் எஞ்சிய 18 சதம் செலுத்தப்படவில்லை.

சில நாட்களுக்குப் பின்னர், லெகோ தனது வீட்டிற்கு மின்சார இணைப்பை துண்டித்துள்ளது. மீள் மின் இணைப்புக்கு மேலதிக கட்டணமாக 1,231 ரூபாயும் நிலுவைத் தொகையான 18 சதங்களும் செலுத்தப்பட வேண்டுமென லெகோ அறிவித்துள்ளது.

மாபாலகம காலி, ரிச்மண்ட் ஹில்லில் உள்ள லெகோ அலுவலகத்திற்கு தனது கட்டணத்தை செலுத்தியமைக்கான அனைத்து ஆவணங்களுடன் விஜயம் செய்தார். ஆனால், அலுவலகத்தில் எந்த ஒரு பொறுப்பான அதிகாரியையும் சந்தித்து முறைப்பாடு அளிக்க முடியவில்லை.

லெகோ அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் மாபாலகம அலுவலக ஊழியர்களிடம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் லெகோவின் அதிகாரி ஒருவர் மாபாலகமவை தொடர்புகொண்டு, தங்கள் தரப்பில் ஒரு பெரிய தவறு நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மின்விநியோகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி மாபாலகமவிடம் உறுதியளித்தார். (dailymirror)

Latest articles

Similar articles