ஜனாதிபதி, பிரதமர், அரச ஊழியர்கள், ஊடகத் தலைவர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் ஊடகத் தலைவர்கள் அடங்கிய சுமார் 150,000 நபர்கள், வருடாந்தம் விரிவான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த கட்டாய வெளிப்படுத்தலுக்கு இணங்குவதற்கான கால அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதி நிர்ணயிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (dailyirror)
