கஞ்சா வளர்த்த பிரித்தானிய பிரஜை கைது

குஷ் போதை பொருள் தயாரிப்பதற்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வெளிநாட்டவர் ஒருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பெலியத்தை பகுதியில் சுற்றுலா வீசா மூலம் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

சுற்றிவளைப்பின்போது 5 அடி உயரமுடைய கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

Similar articles