“சிங்களவர்களுக்கு முன்பதாகவே தமிழர்கள் இங்கு வாழ்ந்தார்கள்”

“தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமித்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது” என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நாடாமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக எஸ்.சிறிதரன் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் கடந்த 24ஆம் திகதி மன்னாரில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சிறிதரன் ஆற்றிய உரையை முழுமையாக காணொளியில் காண்க👆

Latest articles

Similar articles