மத்திய மாகாணத்தில் சுமார் 2,000 சிறுவர்கள் கடும் பொருளாதாரச் சுமையால் பாடசாலை கல்வியை கைவிட்டுள்ளாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
“தோட்டத் தொழிலாளர்களின் 200 வருட வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் கொண்டாட்டங்கள் எதற்கு?” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அண்மையில் ஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மலையக மக்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர்களுக்கான உரிமைகளை இந்த அரசாங்கம் இதுவரை பெற்றுக்கொடுக்காமல் இருப்பதற்கு வெட்கபட வேண்டும். இந்த 200 வருட காலப்பகுதியில் தொண்டமான்கள் மக்களுக்கு செய்த சேவைகள் என்ன? நன்மைகள் என்ன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
