இலங்கையில் 2 புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகம்

இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ (Malee Pink) , மற்றும் லங்கா ரெட்’ (Lanka Red) என பெயரிடப்பட்டு, இலங்கையின் உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் அடையாள நிலையம் (Plant Virus Indexing Centre) மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து புதிய வகை மாதுளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் எனவும் ஒவ்வொரு மரத்திலிருந்தும் வருடாந்தம் 20-25 கிலோ மாதுளையை அறுவடை செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம் ஒரு ஏக்கருக்கு 8 இலட்ச ரூபாய் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பயிரிடுவதற்காக விவசாயிகளிடம் மாதுளை வகைகள் இன்று கையளிக்கப்பட்டன.

Latest articles

Similar articles