உள்ளூர் முட்டையின் விலை அதிகரிப்பு

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாயாலல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 3 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

இதற்கமைய, கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாவுக்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சில்லரை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 54.55 ரூபாய் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles