கட்டாய TIN இலக்கம்: பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு இலகுவாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில், 2024 பெப்ரவரி 01 முதல் வரி அடையாள இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் ஒருவரை வருமான வரிக்கு தானாக பொறுப்பாக்காது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

Latest articles

Similar articles