கொள்ளையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது: Grindr App மூலம் கைவரிசை

இலங்கை மின்சார சபையில் (CEB) மானி வாசிப்பாளராக பணிபுரிபவரிடமிருந்து 100,000 ரூபாயை கொள்ளையடித்த 5 இளைஞர்கள் மொரட்டுவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட நபரை மொரட்டுவை, மொரட்டுமுல்லை, வில்லோராவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் அவரது ஆடைகளை கழட்டி, தாக்கி கொள்ளையடித்துள்ளதாகவும் மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஒரு சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரை இணைய செயலியான கிரிண்டர் (Grindr App) மூலம் உடல் மசாஜ் செய்து கவர்ந்துள்ளார்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், சந்தேகநபர் பகிர்ந்திருந்த இடத்தைப் பயன்படுத்தி வில்லோரவத்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் இளைஞர் தனது ஆடைகளை களைந்து, பாதிக்கப்பட்டவரையும் அவ்வாறே செய்யுமாறு பணித்துள்ளார்.

சில நிமிடங்களின் பின்னர் ஏனைய சந்தேகநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பாதிக்கப்பட்ட நபரை தாக்கி, இளைஞனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டி, பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்திய பின்னர், சந்தேகநபர்கள் அவரது டெபிட் அட்டை மற்றும் இரகசிய இலக்கத்தைப் பெற்று அதில் இருந்து 70,000 ரூபாயையும் அவரது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 29,000 ரூபாயையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், வில்லோராவத்தை, ரவத்தவத்தை மற்றும் லக்ஸபதிய பிரதேசங்களில் இருந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இராணுவ மேஜர் ஒருவரையும் பாடசாலை மாணவர் ஒருவரையும் இதற்கு முன்னரும் இதே போன்று கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (Newswire)

Latest articles

Similar articles