சிறுநீரக பாதிப்பு: சாந்தனின் உடல்நிலை மோசமடைகிறது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொது மன்னிப்பில் விடுதலையான சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சாந்தனின் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொது மன்னிப்பின் விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

முகாமில் சாந்தனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனால் சென்னை பல்நோக்கு விசேட வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார்.

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என அந்த மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கல் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் இரண்டு மாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (Virakesari)

Latest articles

Similar articles