வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கைக்கான இந்திய புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா’விடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை எனக் கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று (22) நடைபெற்றது. (Virakesari)
