நன்கொடையாக கிடைத்த சலவை இயந்திரத்தை விற்பனை செய்த தேரர்

குருநாகல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சலவை இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட விகாரையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னர் குருநாகல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேரரின் வேண்டுகோளுக்கு அமைய வெளிநாட்டில் உள்ள விகாரையின் பங்காளர் ஒருவர் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சலவை இயந்திரம் ஒன்றை நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Virakesari)

Latest articles

Similar articles