“லசந்தவின் படுகொலைக்கு பொறுப்புக்கூறப்படவில்லை”

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டுமென சர்வதேசச மனித உரிமை அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அப்படுகொலையுடன் தொடர்புடையவர்களை தாமதமின்றி பொறுப்புக்கூறச் செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

“15 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில் (ஜனவரி 8) லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை உள்ளக ரீதியில் தீர்ப்பதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்ற போதிலும், வழக்கு விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன’ என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடிவரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றைய திகதி வரை நீதி வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டனைகளிலிருந்து விடுபடுவதை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், அவர்களைத் தாமதமின்றி பொறுப்புக்கூறச் செய்யுமாறும் மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

https://twitter.com/amnestysasia/status/1744204731428549089

 

Latest articles

Similar articles