200 வருடங்களுக்கு மேல் பழமையான கண்டி ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட படகுச் சவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கண்டி நகருக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கண்டி ஏரியில் படகுச் சவாரி வழங்கிய நிலையத்திற்கு சீல் வைக்க கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த படகு சேவையின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, அதனை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிக தொகைக்கு ஏலத்தில் இந்தச் சேவையை ஒருவர் பெறுவதற்கு முன்வந்திருந்ததாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 53 வருடங்களாக தொடர்ந்து படகு சேவையை நடத்தி வந்த நபருக்கும் புதிதாக அதனை ஏலத்தில் எடுத்தவருக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, உள்ளக விசாரணை நடத்தப்படும் வரை குறித்த நிலையத்திற்கு சீல் வைத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவர வெவ, கிரி முகுடா (பாற்கடல்) என அழைக்கப்படும் கண்டி ஏரி, மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாக விளங்குகிறது.
1807 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த செயற்கை ஏரி, இலங்கையின் கண்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
