ஒருபுறத்தில் நல்லிணக்க நாடகத்தை ஆடும் ஜனாதிபதி மறுபுறத்தில் தமிழர்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விகாரைகளை அமைக்க அனுமதிப்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் ஏவி விட்டுக்கொண்டு, காவல்துறையின் கட்டுக்காவலில் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை மறுத்து, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு விட்டு தமிழர் தாயகத்திற்கு வருகின்ற ரணில் விக்ரமசிங்கவினுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை (4) யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
