தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியான Zee Tamil சரி க ம பா நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது கில்மிஷாவையும் சந்தித்தார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.
https://twitter.com/NewsReportlk/status/1743093710349275409
