யானை தாக்கியதில் பாகன் பலி

ரந்தெனிகலயில் அமைந்துள்ள யானைகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்துள்ளார்.

இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற யானை ஒன்றுக்கு திடீரென மதம் பிடித்ததால் மற்றொரு யானையுடன் இருந்த பாகனை தாக்கியுள்ளது.

சம்பவத்தையடுத்து பாகன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று திங்கட்கிழமை (01) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி கிரியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. (virakesari.lk)

Latest articles

Similar articles